வியாழன், 21 மார்ச், 2013

kaviyarasu kannadasanin thathuvangal


புத்தகம் : அர்த்தமுள்ள இந்துமதம்
ஆசிரியர் : கண்ணதாசன்


அருமையான தத்துவங்கள்

 • எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்
 • 'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

 • பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

 • கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.

 • வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.

 • வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.

 • நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.

 • சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.

 • பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.

 • ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.

 • தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை"அருமையான வரிகள்மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது.உயர்ந்தோர்,நல்லோர்,பெரியோர்கள்.ஞானிகள்-
இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.
அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.
அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.
அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.

இந்துமத வேதங்கள் இப்படிச் சொல்கின்றன.
இறந்து போனவர்களுக்காக அழுது கொண்டிருப்பவர் கண்ணீரைத் துடையுங்கள்.
இதற்கு நீங்களும் தப்பமுடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.
எழுந்து ஸ்நானம் செய்யுங்கள்.
உங்களது லௌகிக் கடமைகளைச்செய்யத் தொடங்குங்கள்.
உங்களது இரண்டாவது வாழ்க்கை ஈசுவரனிடத்துத்தொடங்கப்படுகிறது.
அந்த நம்பிக்கையோடு உங்கள் முதல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துங்கள்.
ஆம். தெய்வ நம்பிக்கையின் மீது உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்.
புனிதன் ராஜாஜியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள்.
‘அவரது காலடிச் சுவடுகளில் இருந்து இன்னும் சில ஞானிகள் முளைத்தெழுவார்கள்’ என்ற நம்பிக்கையோடு உங்கள் லௌகிக வாழ்க்கையைத்தொடங்குகள்.


ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”

என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின்படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன்.போன்ற கருத்துகளோடு இந்து மதத்திற்கு புகழ் மாலை சூட்டியுள்ளார்